புதுச்சேரியில் தனியார் தொழிற்சாலை நிறுவனர் பெயரில் ரூ. 5 கோடி மோசடி செய்த மேற்கு வங்கத்தை சேர்ந்தவரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது. அங்கு சுவிகியா என்பவர் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று அடையாளம் தெரியாத எண்ணில் இருந்த வாட்ஸ் அப் மெசேஜில் தொழிற்சாலையில் உரிமையாளர் பேசுவது போல் குறிப்பிட்ட வங்கிக்கு ரூ.5 கோடியே 10 லட்சத்தை அனுப்ப சொல்லியதை நம்பி சுவிகியா அனுப்பி ஏமாந்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன்,கீர்த்தி ஆகியோர் தலைமையில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்பட்டனர்.
விசாரணையில் மோசடியில் ஈடுபட்டது மேற்கு வங்கத்தை சேர்ந்த மொபிகுல் ஆலம் முலா என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து தனி படை போலீஸார் மேற்குவங்கம் சென்று மொபிகுல் ஆலம் முலாவை கைது செய்தனர்.
பின் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 2.3 கோடி பணத்தை போலீசார் மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் மேலும் 5 பேர் ஈடுப்பட்டது தெரியவந்தது. மொபிகுல் ஆலம் முலாவை புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
No comments