திருக்கனூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருக்கனூர் பகுதியில் மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது. இதனை அடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் திருக்கனூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற வாலிபரை பிடித்து சோதனை செய்தது அவர் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணை செய்ததில், விநாயகம் பட்டு பகுதியைச் சேர்ந்த விபூஷ்ணன் என்பதும் அப்பகுதியில் கல்லூரி மாணவர்கள் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனை அடுத்து அவரை திருக்கனூர் காவல் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.விபூஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்த திருக்கனூர் போலீசார் அவரிடம் இருந்து சுமார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்
No comments