புதுச்சேரி சிறைகண்காணிப்பாளரை புதிய உலகம் அறக்கட்டளையினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
புதிய உலகம் அறக்கட்டளை மற்றும் நேஷனல் விஜிலென்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா நிர்வாகம் சார்பில், புதுச்சேரி மாநிலத்தில் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் V. பாஸ்கரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
சந்திப்பின்போது, காவல் கண்காணிப்பாளர் V. பாஸ்கரன் சிறைச்சாலையின் முக்கியத்துவம், சிறைவாசிகளின் வேளாண்பணி, தொழில்வாய்ப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் புதிய உலகம் அறக்கட்டளை மற்றும் நேஷனல் விஜிலென்ஸ் ஆப் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் R. மைக்குடி, மாநில பொதுச் செயலாளர் S. சிவராஜ், புதுச்சேரி மாநில இயக்குனர் திரு வேலவன் மற்றும் மாநில செயலாளர் திரு சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments