ஊடகத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த சேவை புரிந்ததற்காக புதுச்சேரியை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் ராஜகோபால் பழனி சுவாமிக்கு விருது.
சர்வதேச பத்திரிகை மையம், ஆசிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அகாடமி மற்றும் சர்வதேச ஊடகம் பொழுதுபோக்கு துறை இணைந்து நடத்திய 13வது சர்வதேச விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.
இதில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து பத்திரிக்கையாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், ஊடக வல்லுனர்கள் மற்றும் மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், ஊடகத்துறையில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக சேவை புரிந்த புதுச்சேரி மூத்த பத்திரிகையாளர் ராஜகோபால் பழனி சுவாமிக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விழா எதிர்கால தலைமுறை பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக வல்லுனர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments