சத்யா சிறப்பு பள்ளி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பீச் டவுன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஹெல்ப்லைன் நம்பர் வெளியிடப்பட்டது.
சத்யா சிறப்பு பள்ளி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி சார்பில் சர்வதேச வீல் சேர் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி கோரிமேடு பகுதியில் நடைபெற்றது.
சத்யா சிறப்பு பள்ளியில் இயக்குனர் சித்ரா ஷா தலைமையில் நடைபெற்ற விழாவில் ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி பீச் டவுன் தலைவர் வினோத் சர்மா முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சமூக நலத்துறை இயக்குனர் ராகினி, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஹெல்ப்லைன் நம்பரை வெளியிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்களை மகிழ்விக்க திரைப்படம் மற்றும் பாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் சத்யா சிறப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆனந்தரங்கப்பிள்ளை அரசு செவி செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு திரைப்படத்தைக் கண்டு ஆடி பாடி மகிழ்ந்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சத்யா சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் புருஷோத்தமன், ராம்குமார்,ஓம் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments