Breaking News

புதுச்சேரி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு வெளியிட்டுள்ள அறிக்கை..

 


புதுச்சேரி நகராட்சி. கடலூர் ரோடு, முதலியார்பேட்டை ரோடியார்மில் ரயில்வே கிராசிங் மற்றும் புவன்கரே வீதி ரயில்வே கிராசிங் கேட் பகுதிகளில் ரயில்வே துறை சார்பாக பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது ரயில்வே கிராசிங்கை வாகன ஓட்டிகள் கடக்கும் சாலை பகுதிகளை உடைத்து அப்புறப்படுத்தி பழுது பார்த்ததாக தெரிகிறது. அந்த பழுது பார்க்கும் பணி முடிந்த பிறகு ரயில்வே தண்டவாள பகுதியை ஒட்டியிருக்கும் ரயில்வே கிராசிங்கின் சாலை பகுதிகள் குண்டும், குழியுமாக மாறி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த ரயில்வே கிராசிங்கிங்களை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த பகுதிகளை கடக்கும் போது விழுந்து அடிப்பட்டு காயப்படுகிறார்கள். இதனால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதேநேரத்தில் ரயில் போக்குவரத்து நேரங்களில் கேட் மூடப்பட்டு மீண்டும் திறக்கும்போது எதிர்எதிரே வரும் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி கொண்டு ஒரே நேரத்தில் எதிரும் புதிருமாக நின்று விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட நேரம் போக்குவரத்து தடைபடுகிறது. அதன் அருகே தற்காலிக பேருந்து நிலையமும் செயல்படுவதால் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்படுவதாலும் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தடை ஏற்படுகிறது. இப்படியிருக்கும் சூழலில் அங்கு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போக்குவரத்து காவலர்கள் பணியில் இருப்பதில்லை. இதை பொதுமக்கள் பல முறை சுட்டிக்காட்டியும் இதை காவல்துறை கண்டுக்கொள்ளாமல் இருப்பது கண்டிக்கதக்கது.

ஆகையால் மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு போக்குவரத்து காவல்துறையும், ரயில்வே துறையும் இணைந்து செயல்பட்டு அங்கு குண்டும், குழியுமாக இருக்கும் பகுதிகளை உடனடியாக சரிசெய்து இதற்கு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் பாதிக்கப்படும் பொதுமக்களை திரட்டி பொதுநல அமைப்புகள் சார்பாக ரயில் மறியல் போராட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Copying is disabled on this page!