தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாததால் அவ்வழியே பயணிகளை ஏற்றி சென்ற டெம்போவின் முன் சக்கரம் உடைந்து விபத்து.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் நகரப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் 2 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டு புதை விட கேபிள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் வேலை முடிந்ததும் பள்ளங்களை மூடாததால் பல்வேறு இடங்களில் விபத்து ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில், பிரதான சாலையான அண்ணா சாலையில் பயணிகளுடன் சென்ற டெம்போ, பள்ளத்தில் விழுந்ததில் டெம்போவின் முன் சக்கரம் உடைந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
போர்க்கால அடிப்படையில் தோண்டப்பட்ட பள்ளங்களை மூட வேண்டும் என்றும், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயணிகளை ஏற்றி செல்லும் டெம்போ வாகனங்களை போக்குவரத்து துறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என பொது மக்களிடையே கோரிக்கை குரல் எழுந்துள்ளது.
No comments