Breaking News

பிரபல தாதா கருணாவை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையிலிருந்து முழுவதுமாக விடுதலை செய்து உத்தரவு..

 


புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகரை சேர்ந்தவர் பிரபல தாதா கருணா . இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வாழ்க்கை அனுபவித்து வந்தார். சிறையில் நன்னடத்தை வீதிகளின் கீழ் இவர் நடந்து கொண்டதால் தன்னை விடுவிக்கும்படி சிறை துறையிடம் கோரிக்கை வைத்தார். மேலும் ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்படும் தண்டனை ஆண்டுகளையும் தாண்டி பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருவதாக 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் 2024 கடந்தாண்டு உச்ச நீதிமன்றத்தில் தாதா கருணா தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு, தாதா கருணா தரப்பில் கேரள மாநிலத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியும் தற்போது மூத்த வழக்கறிஞர் சிதம்பரேஸ், மற்றும் வழக்கறிஞர் ராஜப்பா ஆகியோர் ஆஜராகி வழக்கில் வாதாடினார். இந்நிலையில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் பிரபல தாதா கருணாவை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையிலிருந்து முழுவதுமாக விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது.

No comments

Copying is disabled on this page!