புதுச்சேரியில் டீ கடை முன்பு பட்டா கத்தியுடன் ரீல்ஸ் இளைஞர் கைது..
புதுச்சேரியில் தொழிலதிபர்களை மிரட்டி, ரவுடிகள் சிலர் மாமூல் வசூலிக்கின்றனர்.யார் பெரிய ரவுடி என்பதை நிருபிக்க, ரவுடி கும்பலுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் வெட்டி கொலை செய்வதும் நடக்கிறது. ரவுடிகளின் கூட்டாளிகள், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்குகளில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் போஸ் கொடுப்பதும், ரீல்ஸ் வெளியிட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு கோரிமேடு பகுதியில் தன்வந்திரி காவல்நிலைய போலீசார் ரோந்து சென்றபோது, டீக்கடை முன்பு இளைஞர் ஒருவர் பட்டா கத்தியுடன் கானா பாடலுக்கு ரீல்ஸ் எடுத்து கொண்டிருந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில்,ரெட்டியார்பாளையம் லம்பார்ட் சரணவன் நகரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் சஞ்சய்(19) என்பதும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதற்காக ரீல்ஸ் எடுத்ததாக தெரிய வந்தது.
இதனையடுத்து சஞ்சயை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
No comments