கொலை செய்து தப்பி செல்லும் போது ஜீ பே மூலமாக சத்யாவிற்க்கு பணம் அனுப்பிய குற்றசாட்டிற்காக அவரது காதலியை கைது செய்துள்ளதாக போலீசார் தகவல்..
கடந்த 14 ஆம் தேதி அன்று காலை புதுச்சேரி ரெயின்போ நகர் ஏழாவது குறுக்கு தெருவில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில், மூன்று வாலிபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதில் கொலை செய்யப்பட்டவர்கள் பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் ரஸி, தீடிர் நகரை சேர்ந்த தேவா, மூலகுளம் பகுதியை சேர்ந்த ஆதி என போலீசாருக்கு தெரியவர கொலை செய்யப்பட்ட மூவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இக்கொலைகள் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையான மூவரும் பிரபல ரவுடி சத்யாவை அவரது எதிரியான ரவுடி முதலியார்பேட்டையை சேர்ந்த விக்கியுடன் கொலை செய்ய திட்டமிட்டதால் இந்த கொலைகள் நடைபெற்றது என கண்டறிந்து பிரபல ரவுடி சத்யா, ஒரு சீரார் உட்பட 10 பேரை இவ்வழக்கில் கைது செய்து 9 பேரை சிறையிலும், சீராரை சீர் திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் மேலும் சிலர் இருப்பதாக சந்தேகித்த போலீசார் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது ரவுடி சத்யாவின் ரகசிய காதலி டாட்டூ நிபுணர் சுமி @ சுமித்ரா (24), கொலைக்கு மேலும் உடைந்தயாக இருந்த ஆபிரகாம் மற்றும் ஹரிஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இதில் ரவுடி சத்யா சுமித்ரா உடன் கடற்கரை சாலையில் காதலர் தினத்தை கொண்டாட சுற்றி வந்ததும், அப்போது சத்யாவை நோட்டமிட்டு கொலை செய்ய திட்டமிட்ட வாலிபர்களை தனது கூட்டாளிகளை வரவழைத்து கத்தி முனையில் கடத்தி சென்ற போது உடன் இருந்ததாகவும், கொலைக்கு பின்னர் ரவுடி சத்யாவிற்க்கு ரூ. 5 ஆயிரம் பணம் சுமித்ரா ஜீபே மூலமாக அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவரை கைது செய்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரையும் போலீசார் நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடியின் காதலி 2 மாத கர்பினியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments