அரியாங்குப்பம் அருகே மது போதையில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் அடுத்த புதுக்குளம் மாரியம்மன் கோவில் அருகே, வாலிபர் ஒருவர் போதையில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டினார். தகவல் அறிந்த அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் கத்தியை காட்டி மிரட்டிய நபரை பிடித்தபோது அவர் அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் சாலையை சேர்ந்த அஜித் (எ) லோகநாதன், 25; என தெரியவந்தது.
அவர் மீது,அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் அடிதடி, கஞ்சா, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்
No comments