வில்லியனூர் தொகுதியில் மின்துறை மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆலோசனை..
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா இன்று காலை மின்துறை கண்காணிப்பு பொறியாளர்கள் சண்முகம், ராஜேஷ் சைனியாள், கனியமுதன் ஆகியோரை மின்துறை தலைமை அலுவலகத்தில் சந்தித்து வில்லியனூர் தொகுதியில் மின்துறை மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட வில்லியனூர் நகரம், சுல்தான்பேட்டை, வி. மணவெளி, மூலக்கடை, ஜி.என்.பாளையம், ஒதியம்பட்டு, ஒதியம்பட்டு பேட், கே.வி. நகர், கொம்பாக்கம், கொம்பாக்கம் பேட், ஒட்டம்பாளையம், பாப்பாஞ்சாவடி, குப்பம் பேட், டாக்டர் அம்பேத்கர் நகர், உத்திரவாகினிப்பேட், பெரியபேட், எஸ்.எஸ். நகர், புதுப்பேட், பீமாராவ் நகர், துர்கா நகர், ஆண்டாள் நகர், வினித் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் எரியாமல் உள்ளதை எரிய வைத்தல், புதிய மின்விளக்குகள் பொருத்துவது, குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்தல், தேவையான இடங்களில் மின் மாற்றி அமைத்தல், குறைந்த மின்னழுத்தம் உள்ள பகுதிகளில் மும்முனை மின்சாரம் வழங்குதல், முக்கிய சாலை சந்திப்புகளில் சோடியம் விளக்கு அமைத்தல், எரியாமல் உள்ள ஹைமாஸ் விளக்குகளை எரிய வைத்தல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைத்தல், பழுதடைந்துள்ள மின் கம்பங்களை மாற்றி அமைத்தல், புதியதாக உருவாகியுள்ள மனைப்பிரிவுகளில் தெரு மின்விளக்குகள் அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, நடப்பு நிதியாண்டில் பணிகள் செய்து முடிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், மின்துறை செயற்பொறியாளர்கள் ரமேஷ், ஸ்ரீதர் மற்றும் தொகுதி திமுக செயலாளர் மணிகண்டன், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு. மோகன்தாசு, விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், சிறுபான்மை அணி அமைப்பாளர் முகம்மது ஹாலித், தொமுச தலைவர் அங்காளன், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் சரவணன், தொகுதி துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், கார்த்தி, ஜனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments