ஆதாரமின்றி அவதூறு பரப்பி வரும் முன்னாள் முதல்வா் நாராயணசாமி மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என அமைச்சா் நமச்சிவாயம் எச்சரிக்கை.
புதுச்சேரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம்,
ஆப்பரேஷன் வேட்டை என்ற புதிய திட்டம் மூலம், ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதன்மையான 10 குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க, ஒவ்வொரு குற்றவாளிக்கும் ஒரு காவலரை நியமிக்க உள்ளோம் என்றும், வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று இரவு நேர சாலையோர உணவகங்கள் நள்ளிரவு 12:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்றார்.
முதல்வா், பேரவைத் தலைவா், உள்துறை அமைச்சா் ஆகியோா் மீது அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடா்ந்து கூறி வரும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
No comments