800 ஏக்கர் நிலத்தில் புதிய தொழிற்சாலைகளை தொடங்க மத்திய அரசின் ஒப்புதலை பெற்றுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தகவல்..
புதுச்சேரி அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை சார்பில் புதுச்சேரி ஸ்டார்ட் அப் ஸ்பிரிண்ட் 2.0 என்ற கருத்தரங்கம் தனியார் ஒட்டலில் நடந்தது.கருத்தரங்கை தொழில் துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர்,...
புதுச்சேரியின் சேதராப்பட்டு கிராமத்தில் கையப்படுத்தப்பட்ட 800 ஏக்கர் நிலத்தில் புதிய தொழிற்சாலைகளை தொடங்க மத்திய அரசின் ஒப்புதல் பெற்றுள்ளோம். ஜூன், ஜூலை மாதத்தில் இது செயல்பாட்டுக்கு வரும் அதில் ஸ்டார்ட்-ப்களுக்கு தனி இடம் ஒதுக்கப்படும்.IT,AUTOMOBILE,
PHARMACEUTICAL தொழிற்சாலைகள் வர உள்ளது என்றார்.இங்குசென்னை IITக்கு 100 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும்,
இதனால் புதிய தொழிற்சாலைகள் வரும் என்று நம்பிக்கை தெரிவித்து நமச்சிவாயம்,இதன் மூலம் புதிய புதிய தொழிற்சாலைகள் உருவாக்கி புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும், அதனால் மாநில வருவாயும் பெருகும் என்றார்.
No comments