கடற்கரைச் சாலையில் சீரமைக்கப்பட்ட கலை, பண்பாட்டுத் துறையின் புதிய அலுவலகத்தை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் திறந்து வைத்தாா்.
புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை அருகில் கலை மற்றும் பண்பாட்டுத் துறை அலுவலகக் கட்டடம் ரூ.4 கோடியில் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து சீரமைக்கப்பட்ட புதிய அலுவலகத்தை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தாா். சட்டப்பேரவை தலைவா் செல்வம், அமைச்சா்கள் லட்சுமி நாராயணன், திருமுருகன் மற்றும் துறைச் செயலா் நெடுஞ்செழியன் ஆகியோா் கலந்து கொண்டனா். துறை இயக்குநா் முரளிதரன் வரவேற்றாா்.
கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் மேளதாளம், மானாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
No comments