Breaking News

4 ஆண்டுகளில் அமைச்சர்களின் ’டீ’ செலவு ரூ. 28 லட்சம் என்றும், பூங்கொத்து செலவு ரூ. 41 லட்சம் மற்றும் மாதத்திற்கு ரூ. 80 ஆயிரம் வரை காருக்கு டீசல்...!

 


புதுச்சேரி குயவர்பாளையத்தை சேர்ந்த அசோக்ராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் புதுச்சேரி அமைச்சர்கள் அலுவலகத்தில் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள்? கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் வரை அலுவலக டீ, காபி மற்றும் பூங்கொத்து வாங்கிய செலவுகள், கார் பயன்பாடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். 

இது தொடர்பாக அமைச்சரவை அலுவலக பொது தகவல் அதிகாரியான அமுதன் அளித்துள்ள பதிலில்,

ஒவ்வொரு அமைச்சரும் தலா ஒரு கார் பயன்படுத்துகிறார்கள் என்றும், அமைச்சர்களின் அலுவலகத்தில் தலா 14 பேர் பணிபுரிகிறார்கள். உள்துறை அமைச்சர் அலுவலக காபி, டீ செலவாக ரூ.7 லட்சத்து 12 ஆயிரத்து 635-ம், பொதுப்பணித்துறை அமைச்சருக்கு ரூ.7 லட்சத்து 81 ஆயிரத்து 421-ம், வேளாண்துறை அமைச்சருக்கு ரூ.11 லட்சத்து 84 ஆயிரத்து 320-ம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருக்கு ரூ.14 லட்சத்து 94 ஆயிரத்து 39ம் என மொத்தம் 28 லட்சத்து 27 ஆயிரத்து 815 செலவிடப்பட்டுள்ளது.

இதேபோல் பூங்கொத்து வாங்கிய வகையில், உள்துறை அமைச்சருக்கு 5.22 லட்சத்து 31 ஆயிரமும், பொதுப்பணித்துறை அமைச்சருக்கு ரூ.8 லட்சத்து 4 ஆயிரத்து 955-ம், முன்னாள் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சருக்கு ரூ.9 லட்சத்து 70 ஆயிரத்து 700-ம், இந்நாள் குடிமைப் பொருள் வழங்கல்துறை அமைச்சருக்கு ரூ.1 லட்சத்து 400-ம் என மொத்தமாக ரூ. 41 லட்சத்து 41 ஆயிரத்து 400 செலவிடப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை  எரிபொருள் தேவைக்கு செலவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Copying is disabled on this page!