உலக சுகாதார தினத்தை முன்னிட்டு காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற சுகாதார திருவிழாவை கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பாக மூன்று நாட்கள் நடைபெறும் 'மாபெரும் சுகாதாரத் திருவிழாவின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்,முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாபெரும் சுகாதாரத் திருவிழாவினைக் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, டெங்குவைக் குறைக்கும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த உறுதுணையாக இருந்த அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ தூதுவர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கும் துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்.அமைச்சர் சரவணன் குமார், தலைமைச் செயலர் சரத் சவுகான், அரசுச் செயலர் ஜெயந்தகுமார் , சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ரவிச்சந்திரன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஆனந்தலட்சுமி, துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
No comments