Breaking News

புதுச்சேரி காவல்துறைக்கு புதியதாக வாங்கப்பட்டுள்ள 7 மோப்ப நாய் குட்டிகளை டிஜிபி ஷாலினி சிங் பார்வையிட்டார்.

 


புதுச்சேரி காவல் துறையில் துப்பறிவு மோப்பநாய் பிரிவு செயல்பட்டு வருகின்றது. இப்பிரிவில் புதுச்சேரியில் 9, காரைக்காலில் 2 என மொத்தம் 11 மோப்ப நாய்கள் இருக்க வேண்டும். ஆனால் 4 மோப்ப நாய்கள் மட்டுமே உள்ளன. 

எனவே காவல் துறைக்கு லேபர்டாக் இனத்தை சேர்ந்த 5 நாய் குட்டிகளும், டாபர்மேன் இனத்தை சேர்ந்த 2 நாய்குட்டிகள் என ஏழு புதிதாக நாய்குட்டிகள் வாங்கி, பணியில் இணைக்கப்பட்டுள்ளன.

காவல் தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்த நாய்குட்டிகளை டி.ஜி.பி., ஷாலினி சிங் தலைமையிலான போலீஸ் உயரதிகாரிகள் கொஞ்சி மகிழ்ந்தனர்.இவை பயிற்சிக்கு பின், புதுச்சேரி வெடிகுண்டு பிரிவில்-3, குற்ற புலனாய்வு-1, போதை பொருள் தடுப்பு பிரிவு-1 என இணைக்கப்படும் என தெரியவந்துள்ளது

No comments

Copying is disabled on this page!