Breaking News

புதிய மதுபானத் தொழிற்சாலைகள், மதுக்கடைகளுக்கு அனுமதி தரும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக அரசின் முடிவை கைவிடக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

 


புதிய மதுபானத் தொழிற்சாலைகள், மதுக்கடைகளுக்கு அனுமதி தரும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக அரசின் முடிவை கைவிடக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் இன்று நடத்தியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மாநில துணைச் செயலாளர் சேதுசெல்வம், தேசியக் குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாரா. கலைநாதன், மாநில பொருளாளர் சுப்பையா, ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டு, புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி தருவதை கைவிட வேண்டும், புதிய மதுபான கொள்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

No comments

Copying is disabled on this page!