Breaking News

75 லட்ச ரூபாய் பணத்தை மீட்டு கொடுத்த இணையவழி போலீசாருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்த தொழிலதிபர்..

 


புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இணைய வழியில் வந்த பங்கு வர்த்தகத்தை நம்பி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து லாபமும் வரவில்லை போட்ட பணத்தையும் எடுக்க முடியாமல் அது இணைய வழி மோசடிக்காரர்களால் உருவாக்கப்பட்ட போலியான செயலி என்பதை உணர்ந்து இணைய வழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து வழக்கு பதிவு செய்து இழந்த பணத்தில் 75 லட்ச ரூபாய் பணத்தை இணைய வழி போலீசார் மீட்டு கொடுத்தனர் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று இணைய வழி காவல் நிலையம் வந்து ஆய்வாளர்கள் கீர்த்தி மற்றும் தியாகராஜன் மற்றும் காவலர் ஜலாலுதீன் ஆகியோர்க்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

இது சம்பந்தமாக இணையவழி போலீசார் பொது மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடியில் சிக்கி சென்ற ஆண்டு மட்டும் 30 கோடி ரூபாய்க்கு மேல் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் பணத்தை இழந்துள்ளனர். ஆகவே இணைய வழியில் வருகின்ற அல்லது சோசியல் மீடியாவில் வருகின்ற சமூக வலைதளங்களில் மூலமாக வருகின்ற விளம்பரங்களை நம்பி எந்த ஒரு பங்கு வர்த்தகம் மற்றும் பணத்தை முதலீடு செய்யும் செயலில் இறங்கி பணத்தை இழக்க வேண்டாம் என புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தின் சார்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்கின்றோம்.

No comments

Copying is disabled on this page!