திருபுவனை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் புதிய மின் மாற்றி மற்றும் மின்பாதை அமைப்பதற்கான பூமி பூஜையினை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் தொடங்கி வைத்தார்.
திருபுவனை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருபுவனை கிராமத்தில் அவ்வை நகர், வெங்கடாஜலபதி நகர், வரதராசு நகர் ஆகிய பகுதிகளில் கடும் மின் தட்டுபாடு நிலவி வந்தது. கலித்தீர்த்தால் குப்பம் கிராமத்தில் சுகுமார் நகர் பகுதியில் மின் அழுத்த குறைபாடு நிலவி வந்தது. இதனை கண்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் மேற்க்கண்ட பகுதிகளிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு அரசு அனுமதி பெறப்பட்டு அவ்வை நகருக்கு மின் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் புதிய 200KVA மின்மாற்றி ரூபாய் 17 இலட்சத்தி 93 ஆயிரத்தி 740 ரூபாய் செலவில் அமைப்பதற்க்கும், சுகுமார் நகர் மின் அழுத்த குறைபாட்டை போக்க மும்முனை மின் பாதை அமைப்பதற்கு ரூபாய் 1 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிட்டிலான பூமி பூஜை அவ்வை நகரிலும் மற்றும் சுகுமார் நகரிலும் நடைபெற்றது. இதில் திருபுவனை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் கலந்து கொண்டு விழாவிற்கு தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மின்துறை உதவி பொறியாளர் பன்னனீர்செல்வம், இளநிலை பொறியாளர் பழனிவேலு, மற்றும் மின் பிரிவு ஊழியர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்...
No comments