புதுச்சேரியில் மோசடி பணம் பெறுவதிற்காக உருவாக்கப்பட்டு இருந்த 139 மோசடி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா..
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
புதுச்சேரியில் பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி 11 பேரிடம் ரூ. 10 கோடி மோசடி செய்த நபரின் கூட்டாளிகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது.
சைபர் கிரைம் குற்றவாளிகள் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்தை கூறி இதுபோன்ற மோசடியில் ஈடுப்படுகின்றனர். யாராலும் பணத்தை இரட்டிப்பாக்கி தர முடியாது. பொதுமக்கள் யாரேனும் ஆன்லைனில் முதலீடு செய்வதிற்கு முன்பு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தவித முன் அறிவிப்பு இன்றி ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம்.புதுச்சேரியில் ஆன்லைன் மோசடியில் பெறும் பணத்தை செலுத்த 139 மோசடியான வங்கி கணக்குகள் உள்ளதாக, மத்திய அரசு தகவல் கொடுத்தது. அதன்படி, புதுச்சேரியில் உள்ள வங்கிகளுக்கு சென்று அந்த வங்கி கணக்குகள் முடக்கி உள்ளோம் என்றார்.
No comments