சீர்காழியில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு பேரணி..
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் குறித்த விழிப்புணர்வு பேரணியானது சீர்காழி மின்சார செயற்பொறியாளர் வள்ளி மணாளன் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி, இளையராஜா, சரவணன், ராஜா, கலைச்செல்வன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரனியானது சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி கச்சேரி ரோடு, ஜி. ஹெச். ரோடு, கடைவீதி, பழைய பேருந்து நிலையம் போன்ற முக்கிய வீதிகளின் வழியாக 200-க்கும் மேற்பட்ட மின்சார ஊழியர்கள் பேரணையாக சென்றனர். இப்பேரணியில் அதிக விளக்குகளை பயன்படுத்த வேண்டாம், குழல் விளக்குகளை மாற்றி விட்டு led பல்புகளை பயன்படுத்த வேண்டும், மின்விசிறி, கிரைண்டர், வாஷிங் மெஷின், குளிர்சாதனப்பெட்டி,இஸ்திரி பெட்டி, குளிர் பதனப்பெட்டி, நீர் ஏற்றும் பம்பு, நீர் சூடேற்றி, கணினி, வீடு, அலுவலகம் மற்றும் பொது இடங்களில் பயன்படுத்தும் பொழுது சிக்கனமாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்த வேண்டும் போன்ற கோஷங்களை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. இதில் உதவி பொறியாளர்கள், இளமின் பொறியாளர்கள், மின்சார பணியாளர்கள் ஆகியோர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டுள்ளார்.
No comments