Breaking News

கார்னிவெல் திருவிழா என்ற பெயரில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் முயற்சி.. இந்து முன்னணியினர் கண்டனம்..

 


பொங்கல் திருவிழாவின் பாரம்பரிய கொண்டாட்டம் மற்றும் அதனைச் சார்ந்த உள்ளூர் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றை அழித்திடும் நோக்கில் பொங்கல் திருநாள் காலங்களில் நடத்தப்படும் கார்னிவெல் திருவிழாவினால் தமிழர்களின் பாரம்பரிய திரு விழாவான பொங்கல் பண்டிகை முற்றிலும் சீர்குலைக்கப்படுவதுடன் அந்த நாட்களில் கட்டாயமாக பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு அதிகாரிகள் பெரும் மனக் குமுறளோடும் மன அழுத்தத்திற்கும் ஆளாக்கப்படும் அபாய நிலை இவ்வாண்டும் தொடரும் சூழல் நிலவுவதை கண்டித்தும், மேலும் அந்த கார்னிவெல் விழாவினை வேறொரு தேதியில் நடத்திட வேண்டி இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதிய பேருந்து நிலைய வாயிலில் நடைபெற்றது.

 இந்து முன்னணி நகர தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் முருகதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

No comments

Copying is disabled on this page!