நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் சீருடை வழங்கல்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு பணியாளர்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோருக்கு தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வைத்தியநாதன், நகராட்சி ஆணையர் இளவரசன், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் டேனியல்ராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புத் தலைவர் தொல்காப்பியன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் கலந்து கொண்டு நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் தேவநாதன், நகர மன்ற உறுப்பினர்கள் மாலதி இராமலிங்கம், செல்வகுமாரி ரமேஷ்பாபு, ஜெயலட்சுமி விஜயபூபதி, சுமதி ராஜேந்திரன், மகேஸ்வரிரமேஷ், கனகவல்லி தேசிங்கு, ரஷித், ராஜா, குமரவேல், முருகவேல், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன் பிடாகம் ஊராட்சி மன்ற தலைவர் நந்தகுமார், துணைத்தலைவர் சம்ஷாத், தனியார் பள்ளி கூட்டமைப்பின் துணை செயலாளர் சிராஜ்தீன் மற்றும் நிர்வாகிகள் ரேவதிமாஜி, பாஸ்கர், நவீனா, சுபாஷ், அகிலன், பரிமளா, கபாகாந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகராட்சி மேற்பார்வையாளர்கள் மகேஷ் ரகுநாதன் ஆகியோ நன்றி கூறினர்.
No comments