பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டதை கண்டித்து உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் சம்பவத்தை கண்டித்து சென்னையில் பசுமை தாயகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சௌமியா அன்புமணி தலைமையில் பசுமை தாயகம் அமைப்பினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சௌமியா அன்புமணி உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்தனர் இந்த சம்பவத்தை கண்டித்தும் சௌமியா அன்புமணியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சத்யா தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசை கண்டித்தும் தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதை தடுக்க தவறிய தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments