நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்ளும் நிலையில்,டிக்கெட் முன்பதிவு செய்யும் மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை..
வில்லியனூர் நகரம் புதுச்சேரியின் மும்மத ஆன்மீக தலமாகும்.இங்கு பிரசித்தி பெற்ற திருக்காமீஸ்வரர் கோவிலும், அருகே திருக்காஞ்சியில் இந்துக்களின் புனித தலமான காசியை போன்ற கங்கைவராகநதீஸ்வரர் கோவிலும், புகழ்பெற்ற வில்லியனூர் மாதா கோவிலும், பிரபலமான சுல்தான்பேட்டை தர்காவும் அமைந்துள்ளன.
பல சித்தர் தலங்களும் வில்லியனூரை சுற்றி அமைந்துள்ளன். பல கல்லூரிகள், தொழிற்சாலைகள் என வில்லியனூர் ஒரு முழுமைபெற்ற நகரமாக காணப்படுகிறது.
வில்லியனுர் ரயில் நிலையத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கிருந்து பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக அதிகாலை சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் மட்டும் வில்லியனூரிலிருந்து 500-க்கும் மேற்பட்டோர் தினமும் பயணிக்கின்றனர்.
இப்படிப்பட்ட சிறப்பான வளர்ச்சியின் நகரமான வில்லியனூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு வசதி இல்லாது நமது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை உண்டாக்குகிறது. இதுபற்றி பலர் கோரிக்கை விடுத்தும் இன்னமும் இவ்வசதி செய்து தரப்படவில்லை.இண்டர்நெட் வசதியோடு ஒரு கம்ப்யூட்டர் வைக்க தென்னக ரயில்வேக்கு எவ்வளவு நாட்கள்தான் தேவை.? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
No comments