பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் கரும்பு, பானை,மஞ்சள் உள்ளிட்ட பொங்கல் பொருட்களின் விற்பனை மும்முரம்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் புதுச்சேரியில் பொங்கல் பண்டிகை களை கட்டி உள்ளது.
அதாவது பச்சரிசி, வெல்லம், கரும்பு, மஞ்சள் கொல்லை, பொங்கல் பானை, புத்தாடை என பொருட்கள் வாங்குவதற்கு புதுச்சேரியில் உள்ள கடை வீதிகளில் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அலை மோதியது.
உழவர்சந்தை, பெரிய மார்க்கெட், நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, வழுதாவூர் ரோடு, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கரும்புகள் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
பொருட்கள் வாங்க வந்தவர்களால் இன்று காலை முதல் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போக்குவரத்தை சீரமைத்து வருகிறார்கள்.
No comments