ஆண்டுக்கு ரூ.1000 கோடி வருவாய் ஈட்ட வாய்ப்புள்ள நிலையில், சாமானிய மக்களை பாதிக்கின்ற விதத்தில் வரி உயர்வுகள்..? அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கண்டனம்.
புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன்,
புதுச்சேரி மாநிலத்தில் வருவாய் பற்றாக்குறையை சீர்படுத்த பல்வேறு வழிகள் இருந்தும், அவற்றையெல்லாம் சீர்தூக்கி பார்க்காமல் சாமானிய மக்களை பாதிக்கின்ற விதத்தில் பெட்ரோல், டீசல் வரி உயர்வை அரசு உயர்த்தியுள்ளது தேவையற்ற ஒன்றாகும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்த்தப்படுவதால் அது நம் மாநில பொருளாதாரத்தை பாதிக்கும் என கூறினார்.
புதுச்சேரி மாநிலத்தில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சொத்து வரி விதிப்பது, தனியார் பேருந்துகளுக்கு சாலை வரி, புதுச்சேரி மாநிலத்தில் நில மதிப்பை உயர்த்துவது, பத்திர பதிவுத்துறையை முறைப்படுத்துவது, மதுபானம் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களுக்கு வரி விதிப்பது, மதுபான கொள்கையில் மாற்றம் கொண்டு வருவது உட்பட பல்வேறு வகையில் நேர்மையான முறையில் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வருமானம் ஈட்ட பல்வேறு வழிகள் இருந்தும்,சாமானிய மக்களை பாதிக்கின்ற விதத்தில் வரி உயர்வுகளை உயர்த்துவது தேவையற்ற ஒன்றாகும் என்றார்.
இது தொடர்பாக ஆளுநர், முதலமைச்சரிடம் அதிமுக சார்பில் விளக்க கடிதம் அளிக்கப்படும் என்றும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கழகப் பொதுச் செயலாளரின் அனுமதி பெற்று அதிமுக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என எச்சரிக்கை விடுத்தார்.
No comments