முடிவைத்தானேந்தல் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்: கேன் ஃபின் ஹோம் நிறுவனம் வழங்கியது!
முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கேன் ஃபின் ஹோம் நிறுவனம் மூலம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி அருகே முடிவைத்தானந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு சுத்தமான குடிநீருக்கும் நோக்கில் ரூ.2 லட்சம் மதிப்பில் கேன் ஃபின் ஹோம் நிறுவனம் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.
இதற்கான விழாவில் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் புனிதா வரவேற்றார், தலைமை ஆசிரியர் எலியாஸ் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் சதீஷ்குமார், பட்டதாரி ஆசிரியை சாந்தமீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடிநீர் சுத்திகரிக்கரிப்பு இயந்திரத்தை கேன் ஃபின் ஹோம் நிறுவன கிளை மேலாளர் பாபு துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், புதூர் ஆறுமுகம், வசந்த், ஆசிரியர்கள் மரிய ஆன்டன் ஜெரால்ட், சாம் ஜெய கிங்ஸின், மகஜா, முத்துக்கனி, பியூட்டா சாந்தி, பொன்மலர், சீனிவாசன், ஜெயந்தி, கிறிஸ்டி, சுந்தரி, பேச்சியம்மை, சுகிர்தா, சந்திரரேசன் மற்றும் அலுவலர் நூருல் ரிஸ்வானா மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மாணவியர் கலைமதி, மஞ்சுளா தேவி ஆகியோர் நன்றி கூறினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் சரவணகுமார் செய்திருந்தார்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments