சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன்.
வேலூர் மாவட்டம் காட்பாடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட காட்பாடி, விருதம்பட்டு காவல் நிலையங்களில் காட்பாடி டி. எஸ். பி. பழனி தலைமையில் சிறப்பாக பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன், தலைமை காவலர் கணேஷ் குமார் மற்றும் காவலர் சங்கர், விருதம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் ஆதர்ஷ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் செந்தில்குமார், தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, தனிப்படை தலைமை காவலர் கணேசன், சந்திரசேகர் தனிப்படை காவலர் கருணாகரன், தமிழ்ச்செல்வன் ஆகியோர்களுக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments