புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து வீடு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 57 பேர் காயம்..
புதுச்சேரியில் நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரை சாலையில் கூடி புத்தாண்டை கொண்டாடினர். பலர் ஓட்டல்கள், பார், ரிசார்ட்டுகளில் ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து அனைவரும் நள்ளிரவு வீடு திரும்பினர்.
புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து திரும்பிய பலர் விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர்.
புதுச்சேரி முத்திரைப்பாளையம், நெல்லுமண்டி வீதியைச் சேர்ந்த அருள்பாண்டியன்(33),அரியூர், ஆனந்தபுரம் சாலை தேவராஜ்(21), ஆகிய இருவர் வெவ்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர்.இரு விபத்துக்கள் குறித்தும் வடக்கு போக்குவரத்து போலீசார் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஒட்டுமொத்தமாக புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மட்டும் 57 பேர்விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர்.இதில் பெரும்பலான விபத்துக்கள் குடிபோதையில் தனக்கு தானே கீழே விழுந்து காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
No comments