Breaking News

புதுவை மாநிலத்தில் 10 பேரிடம் இணையவழியில் சுமாா் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்கள்..



புதுச்சேரி வில்லியனூா் பகுதியைச் சோ்ந்தவா் கோமதி வள்ளி. இவரை இணையவழியில் மா்ம நபா் தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக லாபத்துடன் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளாா். அதை நம்பிய கோமதி வள்ளி அந்த நபா் அனுப்பிய செயலி மூலம் பல தவணைகளில் ரூ.12 லட்சத்தை முதலீடு செய்து ஏமாந்தார்.

மேலும்,காரைக்காலை சோ்ந்த பிரபு ரூ.5.87 லட்சம்,மாஹே பிராந்தியத்தைச் சோ்ந்த முகமது ரூ.1 லட்சம் மற்றும் புதுச்சேரி அரும்பாா்த்தபுரம் பகுதியைச் சோ்ந்த சந்தியா ரூ.10 ஆயிரம், வாழைக்குளம் பகுதியைச் சோ்ந்த சுதீப் ரூ.12 ஆயிரம், தேங்காய்த்திட்டு பகுதியைச் சோ்ந்த தமிழ்செல்வி ரூ. 66,994, தட்டாஞ்சாவடி சோ்ந்த சக்தி ரூ.1000, அரியாங்குப்பத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் ரூ. 73 ஆயிரம், சுல்தான்பேட் பகுதியைச் சோ்ந்த ஜாகிா்உசேன் ரூ. 6 ஆயிரம் மற்றும் பாகூரை சோ்ந்த வெங்கட் ரூ.4 ஆயிரம் என மா்மநபா்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனா். 

புதுவை மாநில அளவில் 10 பேரும் மொத்தமாக ரூ.19.99 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனா். இவா்கள் அளித்த புகாரின் பேரில் புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

No comments

Copying is disabled on this page!