ஆம்பூர் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து குழந்தைகள் உட்பட 20 பேர் காயம். 5 பேர் படுகாயம்.
வேலூர் மாவட்டம் கரிகிரி பகுதியைச் சேர்ந்த சுமார் 25க்கும் மேற்பட்டோர் ஒரே வேனில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலா சென்று விட்டு ஊர் திரும்பிய போது வாணியம்பாடி மாரப்பட்டு பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தபோது,பின் பக்க டயர் வெடித்ததில் வேன் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துகுள்ளனது வேனில் பயணம் செய்த குழந்தைகள் உட்பட 20 பேர் லேசான காயம் அடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
5 பேர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments