ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு விடியற்காலை முதல் வரிசையில் நின்று மணக்குள விநாயகர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்..
ஆங்கிலப் புத்தாண்டு 2025 பிறந்ததை முன்னிட்டு புதுச்சேரியின் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் மணக்குள விநாயகருக்கு விடியற்காலை சிறப்பு பூஜை செய்து, தங்க கவசம் சாத்தப்பட்டது.
புத்தாண்டு அன்று மணக்குள விநாயகரை வழிபட புதுச்சேரி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் விடியற்காலை முதல் இருந்தே நீண்ட வரிசையில் நின்று வணங்கிச் செல்கின்றனர். பக்தர்கள் வசதிக்கேற்ப கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்புகள் வைக்கப்பட்டு, சுவாமியை வழிபட சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். மணக்குள விநாயகரை வழிபட்டு வெளியேறும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள் எந்தவித அசம்பாவிதங்களையும் சந்திக்காத வகையில் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு பக்தர்களை வழி அனுப்பி வைத்தனர்.
No comments