அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் அமைப்பின் சார்பில் திருக்குறள் வினாடி வினா போட்டி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மகிழ்முற்றம் அமைப்பின் மருதம் குழு மாணவிகள் சார்பில் திருக்குறள் வினாடி வினா போட்டி நடைபெற்றது. இதில் மருதம் குழு மாணவிகள் 1330 திருக்குறள்களை எழுதி அதனை காட்சிப்படுத்தி குறளின் அவசியம் குறித்து விளக்கி கூறினார்கள். மேலும் திருக்குறள் வினாடி, வினா போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சரியான பதில் அளித்த மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. இதில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவராஜ், தலைமை ஆசிரியை சரஸ்வதி, உதவி தலைமை ஆசிரியர்கள் தாட்சாயணி, ரஞ்சித்குமார், கனகசபை, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ரமேஷ்பாபு உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments