Breaking News

ஊசுடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேந்தநத்தம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் வாசகால் வைக்கும் நிகழ்ச்சி..

 


புதுச்சேரி மாநிலம்,ஊசுடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேந்தநத்தம் பகுதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஆலய திருப்பணி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் வாசகால் வைக்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4.30 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான சாய் ஜெ சரவணன்குமார் மற்றும் அவரது துணைவியார் அண்ணா பிரபாவதி ஆகியோர் கலந்துகொண்டு விழாவிற்கு தலைமை தாங்கி வாசக்கால் வைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் அமைச்சருக்கு முதல் மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாஜக தொகுதி ஒருங்கிணைப்பாளர் சாய் தியாகராஜன், ஆலய நிர்வாகி ஆறுமுகம் மற்றும் ஆலய நிர்வாகிகள், சேந்தநத்தம் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர்கள், கூட்டணி கட்சியினர், பொதுமக்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

No comments

Copying is disabled on this page!