ஒரே அத்தி மரத்தினால் 14 அடி உயரத்தில் மூலவர் அமைந்துள்ள வானமுட்டி பெருமாள் ஆலய சொர்க்க வாசல் திறப்பு விழா.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கோழிகுத்தி என்ற கிராமத்தில் 14 அடி உயரத்தில் ஒரே அத்தி மரத்தில் அமைந்துள்ள வானமுட்டி பெருமாள் எனப்படும் சீனிவாச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. பிப்பல மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த இடமாகும் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர் காலத்து கட்டமைப்புடன் கூடிய இந்த ஆலயம் பித்ரு தோஷம் சனி தோஷம் நீங்கும் ஆலயமாகும். இக்கோயிலில் சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்று அலங்காரம் பூண்டு பாசுரங்கள் பாடி சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா எனக் கூறி வான முட்டி பெருமாள் என்கிற ஸ்ரீனிவாச பெருமாளை வணங்கி சென்றுனர்.
No comments