பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கட்டாய ஹெல்மெட் அணியும் நடைமுறை இன்று அமலுக்கு வந்தது..
புதுச்சேரியில் கடந்த காலங்களில் 3 முறை கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்டு, நடைமுறை சிக்கல்களால் கைவிடப்பட்டது.இந்நிலையில்,இன்று முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் மீறினால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை தெரிவித்திருந்தது.
புதுச்சேரி நகரப் பகுதியில் மட்டும் ஹெல்மெட் அணிவதற்கு தளர்வு அளிக்க வேண்டும் என அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.இந்த நிலையில் புதுச்சேரியில் பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே ஹெல்மட் கட்டாயம் சட்டம் 4வது முறையாக அமலுக்கு வந்தது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் இன்று முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என உறுதியானது. போலீசார் முக்கிய சாலை சந்திப்புகளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடித்து அபராதம் விதிக்க தயாராகி வருகின்றனர்.இந்த நிலையில் 95 சதவீத வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் பயணித்து வருகின்றனர்.
No comments