முதலமைச்சர் ரங்கசாமி தலைமையலான அரசு ஒரு அற்புதமான அரசு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் புகழாரம்..!
புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் என 150 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறும் அரசாணை வழங்கும் நிகழ்ச்சி முத்தியால்பேட்டை முருகன் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறும் அரசாணையை வழங்கி சிறப்பித்தார்.
தொடர்ந்து விழாவில் பேசிய பிரகாஷ் குமார் எம்எல்ஏ, முத்தியால்பேட்டை தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டாலும், முதியோர்,விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட மகளிர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்குவது மனதிற்கு பெரும் மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்தார்.
சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் என என்னை புறந்தல்லாமல், அரவணைப்போடு முத்தியால்பேட்டை தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு உறுதுணையாக இருக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் சக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சியில் இருக்கும் போதெல்லாம், முதியோர் உதவித் தொகையை உயர்த்தி தருவார் என்றும், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையலான அரசு ஒரு அற்புதமான அரசு என புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மகளிர் மட்டும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments