மிகவும் பழமையான அருள்மிகு கனகவல்லி தாயார் சமேத ஆதி கேசவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள மிகவும் பழமையான அருள்மிகு கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சுவாமி, அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவில் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சோடப உபச்சாரங்கள் நடைப்பெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து அதிகாலை 5.00 மணிக்கு சுவாமி அம்பாள் சொர்க்கவாசல் என்கிற பரமபதவாசல் வழியாக மங்கள வாத்யங்கள் முழங்க பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட எழுந்தருளினார் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள், ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி அம்பாளுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு,சுவாமி, அம்பாள் அர்த்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆதி கேசவ பெருமாளை வழிபட்டனர்.
முன்னதாக கோவில் வளாகத்தில் கோ பூஜை நடைபெற்றது அப்பொழுது பசுவிற்கு சிறப்பு பூஜை செய்து மலரட்சணையும் தீபாராதனையும் நடைபெற்றது.
No comments