5 கோடி செலவில் புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணியினை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
புதுச்சேரி காலாப்பட்டு சட்டமன்ற தொகுதி கருவடிக்குப்பம் வார்டுக்குட்பட்ட மேஜர் சரவணன் நகர், மேட்டுத்தெரு, பள்ளிக்கூட வீதி, பொன்னியம்மன் கோவில் வீதி, கங்கை அம்மன் கோவில் வீதி, அப்பாசாமி கோவில் வீதி, வாத்தியார் வீதி, நாகம்மன் கோவில் வீதி, சித்தானந்தா நகர், விவேகானந்தா விதி, குமரன் வீதி உட்பட 17 சாலைகளை ரூபாய் 5 கோடி செலவில் புதிய சிமெண்ட் சாலைகளாக அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா இன்று கருவடிக்குப்பம் காத்தான் கழுவேற்றல் மைதானம் அருகே நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் .கல்யாணசுந்தரம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதில் கருவடிக்குப்பம் வார்டு பா.ஜ.க பொறுப்பாளர்கள், பொதுமக்கள், மகளிர் , இளஞர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments