மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நடவடிக்கையால் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நரசிங்கமங்கலம் -வடகரை சாலை மீண்டும் சீரமைப்பு..
கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கரும்பூர், தாழநல்லூர், நரசிங்கமங்கலம், பூவனூர், மாளிகைக்கோட்டம் ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஊரக வீடுகள் புனரமைக்கும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெறும் பணிகள், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தபோது நரசிங்கமங்கலம்-வடகரை சாலை முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.171 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த தார் சாலையின் தரம் மற்றும் அளவு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கடந்த 04.01.2025 அன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, நரசிங்கமங்கலம்-எரப்பாவூர் பிரதான சாலையில் இருந்து தற்போது முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் போடப்பட்ட நரசிங்கமங்கலம் -வடகரை சாலை இணைப்பு பகுதி தரமாக அமைக்கப்படாததால் மீண்டும் புதியதாக அமைக்க சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டதற்கிணங்க தற்போது நரசிங்கமங்கலம் -வடகரை சாலை இணைப்பு பகுதி மீண்டும் போடப்பட்டுள்ளதை மீண்டும் ஆய்வு செய்தார். அதுசமயம் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments