பொது மக்களின் நலன் கருதி ரூபாய் 6.5 லட்சம் மதிப்பிட்டியில் 163 கே.பி.ஏ புதிய மின்மாற்றியை உதவி செயற்பொறியாளர் முன்னிலையில் திறந்து வைத்து செயல்படுத்திய எம்எல்ஏ..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட வி.கே.எஸ்.நகர் பகுதியில் குறைந்த மின் அழுத்தத்தால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த கோரிக்கையை ஏற்று ரூபாய் 6.5 லட்சம் மதிப்பிட்டியில் நிதி ஒதுக்கீடு செய்து 163 கே.பி.ஏ புதிய மின்மாற்றியை பொது மக்களின் நலன் கருதி சட்டமன்ற உறுப்பினர் மணிக்கணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்து பொதுமக்கள் செயல் பாட்டிற்காக செயல்படுத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு உதவி செயற்பொறியாளர் சிவராமன் ஐயம்பெருமாள் தலைமை தாங்கினார். உதவி மின் பொறியாளர் அருண்குமார் முன்னிலை வகுத்தனர்.
நகராட்சி பதினாறாவது வார்டு கவுன்சிலர் கலா சுந்தரமூர்த்தி அவர்களை வரவேற்பு நிகழ்த்தினார்.இந்நிகழ்ச்சியில் மின் வாரிய முகவர் சுரேஷ், மின் பாதை ஆய்வாளர் கலைமணி, குமரவேல், கம்பியாளர்கள் மாணிக்கவேல், ஏழுமலை, அருள், மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments