30-வது சர்வதேச யோகா திருவிழாவை கவர்னர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
புதுச்சேரி அரசு, சுற்றுலாத்துறை சார்பில் 30-வது சர்வதேச யோகா திருவிழா பழைய துறைமுக வளாகத்தில் நேற்று துவங்கியது.
விழாவை, கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், தலைமைச் செயலர் சரத் சவுகான், சுற்றுலாத்துறை செயலர் ஜெயந்த குமார் ரே, இயக்குனர் முரளிதரன், யோகா பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.யோகா திருவிழா வரும் 7 ம் தேதி வரை நடக்கிறது.
விழாவில் பேசிய கவர்னர் கைலாஷ் நாதன்,பல்வேறு நோய்களில் இருந்து மனித குலத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கான தீர்வு யோகா தரும். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், அலுவலர்கள், நோயாளிகள் என்று எல்லோருக்கும் பயன் தரும் விதத்தில் யோகாவை எளிமைப்படுத்தி, முறைப்படுத்தி பயிற்சி தர வேண்டும் என்றார்.
No comments