சீர்காழி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் தமிழச்சி பொங்கல் விழா. கலாச்சார முறைப்படி உடையணிந்து பொங்கல் கொண்டாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் விவேகானந்தா மகளிர் கலைக் கல்லூரியில் தமிழச்சி பொங்கல் விழா நடைபெற்றது. சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி பொங்கல் வைத்து விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து கல்லூரியில் பயிலும் இந்து,இஸ்லாமியர், கிறிஸ்துவர், ஜெயின் என அனைத்து சமூகத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் சேலை,பாவாடை தாவணி என பல்வேறு கலாச்சார உடையணிந்து வந்து விழாவில் பங்கேற்று பொங்கல் பானைகள் வைத்து ஒன்றாக கொண்டாடி மகிழ்ந்தனர். பொங்கல் பொங்கியபோது குலவையிட்டும் பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து நடனம் ஆடியும், சிலம்பம் சுற்றியும், உறியடித்தும் தங்கள் திறமைகளை மாணவிகள் வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் விவேகானந்தா கல்வி குழுமங்களின் தலைவர் கே. வி. ராதாகிருஷ்ணன், செயலர் அனிதா ராதாகிருஷ்ணன், மகளிர் கல்லூரியின் இயக்குனர் மருத்துவர் முத்துக்குமார் கல்லூரியின் முதல்வர் ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு தமிழச்சி சமத்துவ பொங்கல் கொண்டாடினார்கள்.
No comments