ரங்கவிலாஸ் தோட்டம், திருவள்ளுவர் நகர், கங்கை அம்மன் கோவில் வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தடையற்ற மின்சாரம் கிடைக்க நடவடிக்கை..
புதுச்சேரி அரசு மின்துறை மூலம் முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட ரங்கவிலாஸ் தோட்டம் பகுதியில் ரூ.16 லட்சம் மதிப்பில் புதைவிட கேபிள் அமைக்கும் பணியின் துவக்க விழா இன்று நடைபெற்றது.
விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் கலந்து கொண்டு பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
மேலும்,இந்த பணி முடிந்தவுடன் ரங்கவிலாஸ் தோட்டம், திருவள்ளுவர் நகர், கங்கை அம்மன் கோவில் வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தடையற்ற மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில்,செயற்பொறியாளர் விமல் குமார்,உதவி பொறியாளர் திலகராஜ்,இளநிலை பொறியாளர் செல்வ முத்தையன் உட்பட அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments