காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் தலைவர் குரு கோபி கணேசன் அறிக்கை.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024-ல் குருவை(காரிப்) சாகுபடி செய்து பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு AIC இன்சூரன்ஸ் நிறுவனம் ரூபாய் 3கோடியே 64 லட்சத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது!
இது மாவட்டத்தில் உள்ள 2850 விவசாயிகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதாலும் வழங்கப்படும் தொகை சொற்பத்தொகை என்பதாலும் விவசாயிகள் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை!
காப்பீடு செய்து கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு சங்கடத்தையும் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மீது அவநம்பிக்கையும் ஏற்படுத்தி உள்ளது!
கடந்த சில வருடங்களாகவே விவசாயிகள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி வரும் பயிர் காப்பீடு திட்டத்தின் மீதும் இதற்கு காரணமாக இருக்கும் ...... கிராமத்தில் விவசாயிகளிடம் கையூட்டு பெரும் இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவன ஊழியர்கள், வேளாண்துறை அலுவலர்கள், புள்ளியல் துறை அலுவலர்கள் மற்றும் கிராம வருவாய் அலுவலர்கள் ஆகியோர்கள் மீது மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
இல்லையேல் தமிழக அரசு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தை புறந்தள்ளிவிட்டு அண்டை மாநிலங்களில் வழங்குவது போல் நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 10,000 பின்னேற்பு மானியமாக வழங்க வேண்டும்! இதனை தமிழக அரசு செய்யாவிட்டால்,
விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஊழல் மற்றும் முறை கேட்டிற்கு வழிவகுக்கும் இப்பயிர் காப்பீடு திட்டத்திற்கு தமிழக அரசும் உடந்தை என்பது போல் ஆகிவிடும் என்று தெரிவிப்பதாக காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் -மயிலாடுதுறை மாவட்டம் தலைவர் குரு கோபி கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
No comments