Breaking News

ஈரோட்டில் செய்வினை, சூழ்ச்சி, காரியத் தடைக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன்..



ஈரோடு மாவட்டம் சென்னிமலை சாலை முத்தம்பாளையம் ஸ்டெம் பார்க் பின்புறம் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் சுமார் பல வருட காலமாக இயங்கி வருகிறது இக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதலை கோரிக்கையாக ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்பாளிடம் வைக்கின்றனர் 

மேலும் பொதுமக்கள் வேண்டும் அவர்களது வேண்டுதலை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் நிவர்த்தி செய்து கொடுப்பதால் மக்களால் அதிக அளவு வரக்கூடிய பக்தி பரவசம் நிறைந்த கோவிலாக கூறப்படுகிறது இக்கோவிலில் பெளர்ணமி பூஜை, அமாவாசை பூஜை. போன்ற சிறப்பு திதிகளில் யாகங்கள் நடத்தப்படும் இதுபோன்ற யாகங்களில் கலந்து கொள்பவர்களுக்கு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை,திருமண தடைகுழந்தை பாக்கியம்.இதுபோன்ற சகல தீமைகளிலிருந்து விலகி நன்மை பெறுவதாகவும் நன்மை பெற்ற பொதுமக்கள் கூறுகின்றனர்.

பொதுமக்களால் பிரசித்தி பெற்ற இக்கோவில் இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் உலக நன்மைக்காகவும், பொதுமக்கள் நலனுக்காகவும், சிறப்பு பிரித்திங்கா தேவி வேள்வி யாக பூஜை நடைபெற்றது அது மட்டுமல்லாமல் உலக இயற்கை வளம் காக்க, விவசாயம், விவசாயிகள் நலன் கருதியும் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கும் வேள்வியாக பூஜை நடைபெற்றது இது போன்ற சிறப்புமிக்க யாகங்களை செய்வதனால் பொதுமக்கள் அதிகளவு இக்கோவிலுக்கு வரத் தொடங்கியுள்ளனர் நினைத்த காரியம் வெற்றி அடைகிறது.

பொதுமக்கள் வேண்டும் வேண்டுதல் அவர்கள் ஏற்றும் தீபத்தில் நிறைவேறுகிறது பல இடங்களில் பல்வேறு பரிகாரம் செய்தும் எந்த ஒரு காரியமும் நிறைவேறாமல் இருப்பதாகவும் இங்கு வந்து வாழ்க்கையில் நல்வலம் பெற்ற பொதுமக்கள் சிலர் மற்ற பொது மக்களுக்கு இக்கோவிலின் அற்புதங்களை கூறி அவர்களும் அவர்கள் மனதில் உள்ள கஷ்டநஷ்டங்களை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் இடம் வேண்டுகின்றனர் 

மேலும் விளக்கோ, இலுப்பெண்ணைவிை அம்மனுக்கு தீபமாக ஏற்றினாள் அவர்கள் வாழ்க்கையில் இருந்து கஷ்ட நஷ்டம் விலகி அவர்கள் வேண்டிய காரியம் நடந்து விடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்,
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை. அம்மாவாசை, பௌர்ணமி,நாட்களில் இக்கோவிலின் நிறுவனர் அருள்வாக்கு
சுவாமி உதையண்ணன் அவர்கள் அருள்வாக்கு கூறுவது வழக்கம் இதுபோன்ற அருள் அவருக்கு வரும் பொழுது கோவிலுக்கு வந்த பக்தர்களை ஒவ்வொருவராக அவர் அழைத்து உன் மனதில் நீ வேண்டியது இந்த காரியம் தானே என்று கேட்டு அதை நிறைவேற்றிக் கொடுப்பாராம் இதனால்தான் இது போன்ற நாட்களில் இவர் எப்பொழுது அருள்வாக்கு கூறுவார் என்று பொதுமக்கள் அதிகளவில் காத்திருப்பார்கள்...

ஆலயத்தில் பரிவார தெய்வமாக கன்னிமூல கணபதியாக வலம்புரி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மாசாணி அம்மன் பெரியகாண்டிச்சி, லஷ்மி நரசிம்மர், வீர ஹனுமார், விஷ்ணு துர்க்கை, சப்த கன்னிமார்கள், வராகி அம்மன், ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி, ஸ்ரீ அக்கரைப்பட்டி கருப்பண்ணசாமி. பாலமுருகன், வழக்கறீத்தீஸ்வரர், ஜலம் விநாயகர், கருவறையில் முப்பெரும் தேவராக விலகிக் கொண்டிருக்கும் ஸ்ரீ சமயபுரத்து மாரியம்மன், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீ கொண்டத்து பத்ரகாளியம்மன், ஆகிய தெய்வங்கள் ஆலயத்தில் இருக்கின்றனர் பரிவார் தெய்வங்களுக்கும் அதற்குடைய நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும் வருகின்ற மாசி மகா சிவராத்திரி அன்று கோவிலில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பூச்சாட்டப்பட்டு பூச்சாட்டப்பட்ட சரியாக 6ம் நாள் குண்டம் இறங்கி, பொங்கல் வைக்கும் திருவிழா நடைபெற இருக்கிறது இதனால் கோவிலுக்கு உலகில் உள்ள அனைத்து பொதுமக்களும் வருகை தருமாறு கோவில் நிறுவனர் அருள் வாக்கு சுவாமி உதயண்ணன் மற்றும் கோவில் துணை நிறுவனர் தமிழரசன் ஆகியோர் அழைக்கின்றனர்.

No comments

Copying is disabled on this page!