நவம்மால்காப்பேர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ நவம்பிகை உடனுறை லிங்கேஸ்வரர் சிவாலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை..
புதுச்சேரி அடுத்த கண்டமங்கலம் ஒன்றியம் நவம்மால்காப்பேர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ நவாம்பிகை உடனுறை ஶ்ரீ நவகோள் லிங்கேஸ்வரர் சிவாலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக அதிகாலையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட
ஸ்ரீ நவகோள் லிங்கேஸ்வரருக்கு சிவலிங்கத்திற்கு சிறப்பு வழிபாடுகள் செய்து இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வேண்டுமென அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதனையடுத்து அப்பகுதி சார்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான சிவ பக்தர்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி சிவனடியார்கள் மற்றும் ஆலய நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments